
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தோரே
Love itself sits enthroned as Shiva.
Smt. Karunambal Vanavaraayar
மங்கையர்க்கரசியார் அறநெறி அறக்கட்டளையின் முன்னாள் மாணவர்களின் கருத்துரைகள்
திருச்சிற்றம்பலம். எனக்கு பார்வை இல்லா விட்டாலும் தாயை என் மனக் கண்ணால் உணர்ந்தேன்.. நான் சென்ற வருடம் பண்ணிசைப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது தாயின் திருவடிகளில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதை பெருமையாக எண்ணுகிறேன்.
வாழ்வில் ஒருவர் எவ்வளவு கட்டுக்கோப்பாகவும், புரிதலுடனும் வாழ வேண்டும் என்பதை அறநெறியின் வாயிலாக நான் தெரிந்து கொண்டேன். இன்று பலருடன் நான் பேசி பழகும்போது அந்த நெறிகள் என்னை மேம்படுத்திக்கொண்டே உள்ளன.
அறநெறி என் வாழ்வில் மிகவும் பெரும் பங்கு வகிக்கிறது. எனக்கு ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை அறநெறி கற்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அறநெறி வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்ட திருமுறைப் பாடல்கள் இன்று வரை என் மனதை அமைதிப்படுத்தும் கருவியாக உள்ளன.
தாய், எனக்கு மேடை ஏறுவதற்கான வாய்ப்பை மட்டுமல்ல, என்னுள் இருக்கும் திறமையை நான் கண்டறிவதற்கான ஒரு தளத்தையும் அறநெறியின் வழியாக அளித்தார்கள்.
தாய் அவர்களின், அறநெறி பாடத்தின் கோடை கால சிறப்பு முகாமில் பயனடைந்த ஒருவன் நான். சிறப்பு முகாமில் மாணவர்களுக்கு சிறந்த சொற்பொழிவு, நடனம், யோகா, கச்சேரி, காணொளி போன்றவற்றை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு நற்கருத்தை போதித்தவர்.
தன் தந்தையின் கனவைத் தன் வாழ்நாள் பணியாக ஏற்றுக்கொண்டு, அதை அறநெறி என்ற வழியில் எத்தனையோ குழந்தைகளின் வாழ்க்கைக்குள் கொண்டு சென்ற அவர்களின் பணி என்றும் அழியாது. அந்நெறிகளை நாம் வாழ்வில் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு முறையும், தாய், நம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
These recollections were written by the people who knew her best, some in English and some in Tamil. There is a QR code at the end of the printed book which opens here to read in your preferred language.
Read the tributes